சனி, 21 ஜூலை, 2012

குற்றவாளிகளின் பிரதிநிதி

                    வியாழகிழமை நடந்த ஜனாதிபதி தேர்தல் , நம்ம ஊரு நியூஸ் சேனல் எல்லாம் திரும்ப திரும்ப அதையே அலுக்காம சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்ம பாராளுமன்ற சட்டமன்ற உறுபினர்கள் எலாரும் நம்ம நாட்டோட  முதல் குடிமகன தேர்வு செஞசிகிட்டு இருந்தாங்க. எனக்கு கொஞ்சநாள் முன்னாடி படிச்ச பதிவு ஒன்னு ஞாபகம் வந்துச்சி (indiaassuperpower.blogspot.in). 

அதாவது நம்ம பாராளுமன்ற உறுபினர்கள் ல 28 சதவீதம் பேரு மேல குற்றவியல் வழக்கு இருக்குதாம். (கம்மியா சொல்லறிங்க சார் நல்லா பாது சொல்லுங்க) . நடப்பு பாராளுமன்ற MPகளில் 150 பேரு மேல குற்றவியல் வழக்கு நிலுவைல இருக்கு. 73 பேருக்கு தண்டனைலாம் விதிக்க பட்டு இருக்கு.
வாக்குமூலங்கள் உள்ளவர்கள்  - 533
குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் - 150 (28.14 %)
தீவிர குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் - 72 (13.51 %)
MPகளுக்கு எதிரான மொத்த கிரிமினல் வழக்குகள் - 412
தீவிர IPC பிரிவிகளில் குற்றம் சாட்டபட்டவகள் - 213

கீழே உள்ள மேப்பில் வலது பக்கத்தில் உள்ள பெயரில் கிளிக்கி அந்த MP இன் மேல் உள்ள குற்றவியல் வழக்குகளை காணலாம்.
நியூ டேபில் காண -> http://www.mibazaar.com/indianpolitics.html


அப்டியே போறபோக்குல இதயும் பாத்துடுங்க

http://logintome2.blogspot.in/2011/06/rs910603234300000.html சனி, 14 ஜூலை, 2012

ஹிக்ஸ் போசான்


             நமது பதிவை சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று தொடங்குவோம், அதாவது 1800களில் இயற்பியல் இன்று இருப்பது போல் கடினமானதாக இருந்திருக்க வில்லை. நியூடோனியன் விதிகளையே  அடிப்படையாக கொண்டு இருந்தன. அதாவது அணுவே (atom) அடிப்படை துகள் அணைத்து பொருட்களும் அணுவால் ஆனவை, அணுவை பிளக்க முடியாது.

 ( நம் ஒளவ்வை பாட்டி ஆயிரம் வருஷதுக்கு முன்னாடியே  சொல்லிபுட்டாங்க 
"அணுவை பிளந்தேல்ழ கடலை புகுத்தி குறுக்க தரித்த குறல்" 
...சுமால் பாய்ஸ் இப்பதான் இதவே கண்டுபுகிரானுங்க )


            அதன் பிறகு கண்டுபிடிக்க பட்ட ஒரு முக்கியாமன கண்டுபிடிப்பு  கதிவீச்சு, x-கதிர்கள் காமா கதிகள், இதெல்லாம் எதேர்ச்சையாக கண்டுபிடிக்க பட்டாலும் மிக  முக்கியமானவை. இயற்பியலாளர் J.J.தாம்சன் எலக்ட்ரானை கண்டுபிடித்தார். அணுக்கள் மேல  எலக்ட்ரான்கள் பொதிக்க பட்டு இருபதாக கூறினார். 1911 ல ரூதர்போர்ட் இன்னும் ஒருபடி மேலே சென்று அணு எனபது பெரும்பாலும் வெற்றிடத்தை கொண்டது அதன் நிறை எனபது அதன் அணுக்கருவில் உள்ளது,  எலக்ட்ரான்கள் அனுகருவை சுற்றி வருகின்றன என்றார்.


        ஐன்ஸ்டீநின்  சார்பியல் கொள்கை (1905) மற்றும் பொது சார்பு கோட்பாடு (1915), இயற்பியலில் ஒரு பெரும் புரட்சி எனலாம், 

ஐன்ஸ்டைனின் தத்துவம்மேலும் பல புதிய விஷயங்களை சொல்கின்றன... ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும் ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கின்றன..
இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும் தூரம் குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார் ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார்.
முரண்பாடுகள் போல தோன்றினாலும் இதுதான் உண்மை.
ஒளி என்பது அலை அல்ல துகள் (போட்டாங்கள்) என கூறினார்.
 Einstein, Rutherford, Max Planck, Niels Bohr, Werner Heisenberg, போன்ற பெரிய இயற்பிலாளர்கள் கனவிலும் எண்ணிடாத அளவு இயற்பியலில் வளர்ந்து இருகிறோம்.
மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை, அணுக்கள் ப்ரோடான் மற்றும் நியூட்ரான்களால் ஆனவை, ப்ரோடான்களும் மற்றும் நியூட்ரான்களும் quark மற்றும் gluon களால் ஆனவை. நாம் இன்னும் முழுதாக தெளிவடைய வில்லை (பிசிக்ஸ்னாலே கொழப்பம் தான்) .  quarkகள் எதனால் ஆனவை??.  

இது எந்த இடம் ?


இதுதான் The Large Hadron Collider, அதிவேக ப்ரோட்டான்களை முடுக்கி மோதவிடும் துகள் முடுக்கி particle accelerator, விக்கிபீடியவில் இதற்கான் தமிழ் மொழிப்பெயர்ப்பு. பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider, அல்லது LHC) எனப்படுவது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ளஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைகூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும்இயற்பியல் கருவி ஆகும். அதிகளவு ஆற்றலைக் கொண்டபுரோத்தன்களை எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி (particle accelerator) ஆகும்.

இத்திட்டத்தை உலகின் 85 நாடுகளின் 8,000 இயற்பியலாளர்களும்நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடங்களும் இணைந்து பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் நிலத்துக்கடியில் 300 அடி ஆழத்தில் நீள வட்டத்தில் 27 கிமீநீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர்.
இந்தக் கருவியைக் கொண்டு புரோத்தன்களை 7 டெர்ரா இலத்திரன் வோல்ட்டில் மோதவிட்டால், சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும். இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், இதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். இதுவரை புலப்படாமல், அகப்படாமல் ஆனால் இருப்பதாக நம்பப்படும் ஹிக்ஸ் போசான் (Higgs Boson) போன்ற துகள்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம் என்று துகள் இயற்பியலார்கள் அனுமானிக்கிறார்கள். இதைக் கண்டுகொண்டால், தரப்படுத்தப்பட்ட மாதிரி (Standard Model) என்று இப்பொழுதுள்ள அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் புரியலாம். அத்துடன் அடிப்படைத் துகள்கள் எவ்வாறு திணிவு போன்ற இயல்புகளை எவ்வாறு பெற்றன என அறியலாம்.

27கிமீ  நீல டனல்லில்  பராமரிப்பு வேலை செய்யும் பொறியாளர் 

Compact Muon Solenoid 


இந்தியா பரிசாக கொடுத்த நடராஜர் சிலை 
படங்கள் BBC ல சுட்டது ..
ஹிக்ஸ் போசான் என்றல் என்ன ?
 இது ஒரு அணுத்துகள், பிக் பாங் எனப்படும் பெரும் வெடிப்பினால் தான் மொத்த  பிரபஞ்சமும் உருவானது , அணு என்பது 12 துகள்களின் சேர்கை தான், அதில் ஒன்றுதான் ஹிக்ஸ் போசான். இதுதான் அணைத்து பரு பொருள்களுக்கும் நிறையை தருகிறது.

பீட்டர் ஹிக்ஸ் என்னும் பிரிட்டிஷ் அறிவியலாளர் 1964 ல் ஹிக்க்ஸ் போசான் இருப்பை பற்றி கூறினார்.

பினொட்டு "போசான்" என்பது இந்திய அறிவியலாளர் சத்யேந்த்ரியநாத போஸ் ஐ குறிக்கிறது. 1924 ல் இவர் ஐன்ஸ்டீனுக்குனுக்கு  அனுப்பிய ஆராய்ச்சி கட்டுரையான  போஸ் - ஐன்ஸ்டீன் ஆவி நிகழ்வு  The Bose-Einstein condensate phenomenon ல் 2 அடிப்படை அணுத்துகள்கள் பற்றி பேச படுகிறது. முதலாவது போசான் (சத்யேந்த்ரியநாத போஸ் ஐ குறிக்கிறது), இரண்டாவது பெர்மியன் (இத்தாலிய இயற்பியலாளர் என்ரிகோ பெர்மி ஐ குறிக்கிறது).

- மீதி அடுத்த பதிவில்